தனியுரிமைக் ைகொள்கை
தரவுப் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் EU பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) மற்றும் தற்போதைய தேசிய தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் விதிகளுக்கு இணங்குகிறோம். புகாரைச் சமர்ப்பிக்கும் முன் இந்தத் தரவுப் பாதுகாப்புத் தகவலை கவனமாகப் படிக்கவும்.
புகாரளிக்கும் அமைப்பின் நோக்கமும் சட்ட அடிப்படையும்
புகாரளிக்கும் அமைப்பு (BKMS® System அமைப்பு), Intersnack GmbH & Co. KG இன் இணக்க விதிகளை மீறுவது தொடர்பான புகார்களைப் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் பெறவும், செயலாக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் உதவுகிறது. BKMS® System அமைப்பின் கட்டமைப்பிற்குள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவது, துஷ்பிரயோகங்களைக் கண்டறிந்து தடுப்பதில் எங்கள் நிறுவனத்தின் சட்டப்பூர்வமான ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டது, மேலும் அதன் மூலம் Intersnack GmbH & Co. KG, அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. தனிப்பட்ட தரவை செயலாக்குவதற்கான சட்ட அடிப்படையானது GDPR (பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை) இன் பிரிவு 6(1)(f) ஆகும்.
பொறுப்புள்ள தரப்பினர்
புகாரளிக்கும் அமைப்பில் தரவுப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான தரப்பினர்
- Intersnack GmbH & Co. KG மற்றும்
- அதன் துணை நிறுவனங்கள்
பரஸ்பர தன்னாளுகைப் பொறுப்பைக் கொண்ட தரப்புகளாக (இனிமேல்: “Intersnack GmbH & Co. KG”). புகாரளிக்கும் அமைப்பு Intersnack GmbH & Co. KG சார்பாக ஜெர்மனியின் பெர்லினில் உள்ள EQS Group GmbH, பேய்ரூதர் Str. 35, 10789 என்ற ஒரு சிறப்புத் தேர்ச்சி பெற்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
புகாரளிக்கும் அமைப்பில் உள்ளிடப்பட்ட தனிப்பட்ட தரவுகளும் தகவல்களும் உயர் பாதுகாப்புத் தரவு மையத்தில் EQS Group GmbH ஆல் இயக்கப்படும் தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். Intersnack GmbH & Co. KG மட்டுமே தரவுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. EQS Group GmbH மற்றும் பிற மூன்றாம் தரப்பினருக்குத் தரவுகளுக்கான அணுகல் இல்லை. இது பரந்த தொழில்நுட்ப, நிறுவன நடவடிக்கைகள் மூலம் சான்றளிக்கப்பட்ட ஓர் செயல்முறை மூலம் உறுதி செய்யப்படுகிறது.
அனைத்துத் தரவுகளும் ஓர் அனுமதிகளின் முறைமைக்கு இணங்கப் பல மட்டக் கடவுச்சொல் பாதுகாப்புடன் மறைகுறியாக்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது, இதனால் Intersnack GmbH & Co. KG இல் வெளிப்படையாக அதிகாரமளிக்கப்பட்ட மிகச் சிறிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டும் என அணுகல் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஓர் தரவுப் பாதுகாப்பு அதிகாரியை Intersnack GmbH & Co. KG நியமித்துள்ளது. Intersnack GmbH & Co. KG இல் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளை datenschutz@intersnackgroup.com க்கு அனுப்ப முடியும்.
சேகரிக்கப்படுகின்ற தனிப்பட்ட தரவு வகை
புகாரளிக்கும் அமைப்பின் பயன்பாடு தன்னார்வ அடிப்படையில் நடைபெறுகிறது. நீங்கள் புகாரளிக்கும் அமைப்பு மூலம் ஒரு புகாரைச் சமர்ப்பித்தால், பின்வரும் தனிப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம்:
- உங்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்துவதை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், உங்கள் பெயர்.
- நீங்கள் Intersnack GmbH & Co. KG இன் ஒரு பணியாளரா இல்லையா என்பது.
- பொருந்தினால், உங்கள் புகாரில் நீங்கள் பட்டியலிட்ட நபர்களின் பெயர்களும் பிற தனிப்பட்ட தரவுகளும்.
புகார்களை இரகசியமாகக் கையாளுதல்
உள்வரும் புகார்கள் Intersnack GmbH & Co. KG இன் இணக்க அமைப்பின் வெளிப்படையான அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களின் ஒரு சிறிய குழு மூலம் பெறப்படுகின்றன, மேலும் அவை எப்போதும் ரகசியமானவையாகக் கையாளப்படுகின்றன. Intersnack GmbH & Co. KG இன் இணக்க அமைப்பின் பணியாளர்கள் விடயத்தை மதிப்பீடு செய்து, குறிப்பிட்ட சம்பவத்துக்குத் தேவைப்படும் மேலதிக விசாரணையை மேற்கொள்கின்றனர்.
ஒரு புகாரைச் செயலாக்கும் போது அல்லது ஒரு சிறப்பு விசாரணையை மேற்கொள்ளும் போது, Intersnack GmbH & Co. KG இன் மேலதிக பணியாளர்களுடன் அல்லது பிற குழும நிறுவனங்களின் ஊழியர்களுடன் புகார்களைப் பகிர வேண்டியிருக்கும், எ.கா. துணை நிறுவனங்களில் நடந்த சம்பவங்களைப் புகார்கள் குறிப்பிடுகின்றன என்றால். பின்கூறப்பட்டவை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அல்லது ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு வெளியே உள்ள நாடுகளில் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பைப் பற்றிய வித்தியாசமான ஒழுங்கு விதிமுறைகளைக் கொண்டதாக இருக்கலாம். புகார்களைப் பகிரும்போது, பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்பு ஒழுங்கு விதிமுறைகளுக்கு இணங்குவதை நாங்கள் எப்போதும் உறுதி செய்வோம்.
தரவுகளுக்கான அணுகலைப் பெறும் அனைத்து நபர்களும் இரகசியத்தன்மையைப் பேணும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவரைப் பற்றிய தகவல்கள்
இந்தத் தகவலை வெளிப்படுத்துவது விசாரணைக்கு இடையூறு விளைவிக்காத பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்ட தரப்பினருக்கு எதிராக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் அவர்களுக்கு அதை உடனடியாகத் தெரிவிக்க நாங்கள் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் சட்டப்பூர்வமாக அவ்வாறு செய்யக் கடமைப்பட்டாலே ஒழிய, ஒரு புகாரளிப்பவர் என்ற உங்கள் அடையாளம் வெளியிடப்பட மாட்டாது.
தரவுப் பிரஜைகளின் உரிமைகள்
ஐரோப்பிய தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஏற்ப, உங்களுக்கும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கும் அணுகலுக்கு, திருத்தங்களை மேற்கொள்வதற்கு, அழிப்பதற்கு மற்றும் செயலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதை எதிர்ப்பதற்கு உரிமை உள்ளது. தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் உரிமை பயன்படுத்தப்பட்டால், ஒரு புகாரின் விசாரணைக்காகச் சேமிக்கப்பட்ட தரவின் அவசியம் உடனடியாக மதிப்பீடு செய்யப்படும். இனித் தேவைப்படாத தரவுகள் ஒரேயடியாக நீக்கப்படும். உங்களுக்கு மேற்பார்வை அதிகாரிையிடம் புகார் அளிக்கவும் உரிமை உண்டு.
தனிப்பட்ட தரவைத் தக்கவைத்திருக்கும் காலகட்டம்
தனிப்பட்ட தரவானது நிலைமையைத் தெளிவுபடுத்துவதற்கும், இறுதி மதிப்பீட்டைச் செய்வதற்கும் அல்லது நிறுவனத்தின் பங்கில் சட்டப்பூர்வமான ஆர்வங்கள் உள்ளது என்றால் அல்லது அது சட்டத்தால் தேவைப்படும் வரை தக்கவைக்கப்படுகிறது. புகாரின் செயலாக்கம் முடிந்தவுடன், சட்டப்பூர்வ தேவைகளுக்கு ஏற்ப இந்தத் தரவுகள் நீக்கப்படும்.
புகாரளிக்கும் அமைப்பின் பயன்பாடு
உங்கள் கணினிக்கும் புகாரளிக்கும் அமைப்புக்கும் இடையேயான தகவல் தொடர்பு ஒரு மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு (SSL) வழியாக நடைபெறுகிறது. நீங்கள் புகாரளிக்கும் அமைப்பைப் பயன்படுத்தும் போது உங்கள் IP முகவரி சேமிக்கப்பட மாட்டாது. உங்கள் கணினிக்கும் BKMS® System அமைப்புக்கும் இடையேயான தொடர்பைப் பேண, ஒரு குக்கீ உங்கள் கணினியில் சேமிக்கப்படுகிறது, அதில் அமர்வுக்கான ID (செஷன் குக்கீ என அழைக்கப்படும்) மட்டுமே உள்ளது. இந்த குக்கீ உங்கள் அமர்வு முடியும் வரை மட்டுமே செல்லுபடியாகும், மேலும் நீங்கள் உங்கள் உலாவியை மூடும்போது காலாவதியாகிவிடும்.
தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புனைப்பெயர்/பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட புகாரளிக்கும் அமைப்பிற்குள் ஒரு அஞ்சல் பெட்டியை உங்களுக்கு அமைக்கலாம். இது முறையே பொறுப்பான Intersnack GmbH & Co. KG பணியாளருக்குப் பெயரிடப்பட்ட அல்லது அநாமதேயமான புகார்களைப் பாதுகாப்பான முறையில் அனுப்ப உங்களை அனுமதிக்கிறது. இந்த அமைப்பு புகாரளிக்கும் அமைப்பினுள்ளே மட்டுமே தரவைச் சேமிக்கிறது, இது குறிப்பாக இதைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. இது ஒரு வழக்கமான மின்னஞ்சல் தொடர்பு ் வடிவம் அல்ல.
இணைப்புகளை அனுப்புவது பற்றிய குறிப்பு
ஒரு புகாரை அல்லது ஒரு மேலதிக விடயத்தைச் (கூடுதலாக) சமர்ப்பிக்கும் போது, பொறுப்பான Intersnack GmbH & Co. KG பணியாளருக்கு நீங்கள் இணைப்புகளை ஒரே நேரத்தில் அனுப்பலாம். நீங்கள் ஒரு அநாமதேயமான புகாரைச் சமர்ப்பிக்க விரும்பினால், பின்வரும் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கவனத்தில் கொள்ளவும்: கோப்புகளில் உங்கள் அநாமதேயத்தைப் பாதிக்கக்கூடிய மறைக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகள் இருக்கலாம். ஒரு கோப்பை அனுப்புவதற்கு முன்பு, அத்தகைய தகவல்கள் அனைத்தையும் அகற்றவும். இந்தத் தரவுகளை உங்களால் அகற்ற முடியாவிட்டால் அல்லது அவற்றை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்துத் தெரியாவிட்டால், உங்கள் இணைப்பில் உள்ள வாசகத்தை உங்கள் புகார் உரைக்கு நகலெடுக்கவும் அல்லது புகாரளிக்கும் செயல்முறையின் முடிவில் பெறப்பட்ட குறிப்பு எண்ணை மேற்கோள் காட்டி அச்சிடப்பட்ட ஆவணத்தை அடிக்குறிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள முகவரிக்கு அநாமதேயமான முறையில் அனுப்பவும்.
பதிப்பு: ஜூலை 2021